|
ஞானி ஒருவரை சந்தித்த மன்னன், சுவாமி! நீங்கள் ஞானம் பெற்ற பின் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எனக் கேட்டான். புன்னகைத்த துறவி, விறகு பிளக்கிறேன். தண்ணீர் எடுத்து வருகிறேன். பசித்தபோது <உண்கிறேன். களைத்தபோது உறங்குகிறேன் எனக் கூறினார். வியப்படைந்த மன்னன், சுவாமி! நீங்கள் மிகப் பெரும் ஆசிரமம் நடத்துபவர். உங்கள் ஏவல்களை செய்து முடிக்க ஆயிரக்கணக்கில் சீடர்கள் இருக்கும்போது, விறகு பிளப்பது, தண்ணீர் எடுத்து வருதல் போன்ற வேலைகளை நீங்கள்தான் செய்ய வேண்டுமா? நம்மால் முடியும் எந்த ஒரு வேலையையும் ஆழ்ந்து செய்வதே உண்மையான தியானம், அதைத்தான் செய்துவருகிறேன் என்றார் அமைதியாக!
|
|
|
|