|
மன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது அங்கே ஒரு யோகி மிகவும் மகிழ்வுடன் இருப்பதைக் கண்டான். துறவியே! என்னிடம் இல்லாத செல்வங்களே இல்லை எதை நினைத்தாலும் என்னால் உடனே சாதிக்க முடியும். இருந்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் ஒரே ஒரு கவுபீனத்தை வைத்துக் கொண்டு உங்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது அதன் காரணம் என்ன? என் மனதில் ஆசை என்பதே இல்லை. அதனால் என்னிடம் செல்வம் என்பதே இல்லை. செல்வம் ஏதும் இல்லாததால் எனக்கு எதிரிகள் எவரும் இல்லை. எதிரிகள் யாரும் இல்லாத காரணத்தினால் நான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதுசரி, ஆனால் தங்களுக்கென ஒரு வீடுகூட இல்லையே? யார் சொன்னது? இந்த உலகத்திலேயே மிகப் பெரிய வீடு என்னுடையதுதான். அப்படியா? என்னுடைய அரண்மனையைவிடப் பெரிதா..? நிச்சயமாக! உங்களுடைய வீடு எங்கே இருக்கிறது? இதோ என் காலடியில் உள்ளது. இந்த மிகப் பெரிய உலகம்தான் என்னுடைய வீடு! துறவியின் பதில், மன்னனை வெகுவாக மாற்றியது.
|
|
|
|