|
துறவி ஒருவரைச் சந்தித்த அரசன் ஒருவன் தந்தை, அரசன், இறைவன் மூவரில் யார் சிறந்தவர்? என்று கேட்டான். அரசே! தந்தை பொன் போன்றவர். அரசனோ வெள்ளிக்கு ஒப்பானவர். இறைவனோ உணவு, தானியம் போன்றவர் என்றார். அப்படியானால் இறைவன் மதிப்பில் குறைந்தவரா? என்று கேட்டான் அரசன். அரசே! பொன்னும் வெள்ளியும் மதிப்பில் உயர்ந்திருந்தாலும் அவையில்லாமல் மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால் உணவு தானியமின்றி மனிதனால் உயிர்வாழ முடியாது என்றார், துறவி.
|
|
|
|