|
ஞானி ஒருவரை சந்தித்த இளைஞன் ஒருவன் ஐயா... யார் எதைச் செய்தாலு<ம் அதில் உள்ள குறைகளே எனக்குத் தெரிகின்றன. ஏன் இப்படி? என்று கேட்டான். பூவேலை செய்யப்பட்ட துணி ஒன்றை எடுத்தார் ஞானி. அதன் ஒரு பக்கத்தை இளைஞனிடம் காட்டியவர், இதில் என்ன தெரிகிறது? என்று கேட்டார். ஒழுங்கற்ற முறையில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் நூல் தெரிகிறது...! ஞானி துணியின் மறுபக்கத்தைக் காட்டி அதே கேள்வியைக் கேட்டார். அழகான பூ தெரிகிறது..! இப்படித்தான் எந்த விஷயத்திலும் நீ எந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தே குறையும் நிறையும் தெரியும். மற்றவருக்கு எதிராக இருப்பதை விட்டு அவருக்கு அருகில் இருந்து பார். அப்போது எல்லாமே நிறையாகத் தெரியும்! ஞானி சொல்ல, இளைஞனுக்கு தன் தவறு புரிந்தது.
|
|
|
|