|
ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் தீர்மானிப்பது பணமா? குணமா? அறிஞர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினார்கள் சிலர். அவரவரின் செயல்களே! சொன்ன அறிஞரிடம் எப்படி? என கேள்வி எழுப்பியவர்களை தையற்கடை ஒன்றிற்று அழைத்துப் போய் அங்கு நடப்பவற்றைப் பார்க்கச் சொன்னார். துணிகளை எடுத்து கத்தரியால் வெட்டிக் கிழித்த பின்னர், ஊசியால் அவற்றை வேண்டிய வடிவில் தைத்தார் கடைக்காரர். முடிவில் கத்தரி அப்படியே கீழே கிடக்க, ஊசியை மட்டும் எடுத்து பத்திரமாக சட்டையில் ஓரிடத்தில் குத்தி வைத்துக் கொண்டார். அறிஞர் சொன்னார்.. எல்லாவற்றையும் வெட்டிப் பிரித்த கத்திரிக்கோல் தரையில் கிடக்கிறது. ஒன்றாகச் சேர்த்த ஊசி உயர்வான இடத்தில் பத்திரமாக இருக்கிறது...! இப்படித்தான் செய்யும் செயல்களே பெருமையையும் புகழையும் தீர்மானிக்கிறது..! உணர்ந்து பணிந்தார்கள் வந்தவர்கள்.
|
|
|
|