|
மகான் மத்வாச்சாரியாரிடம் ஒரு பக்தர் கேட்டார். சுவாமி! குருவின் துணையின்றி ஒருவர் முக்தியை அடைய இயலாதா? மகான் பதிலேதும் சொல்லாமல், ஒரு சிறு கல்லை எடுத்து, அருகில் உள்ள ஆற்றின் நீர் மட்டத்தில் வைத்தார். கல் ஆற்றில் மூழ்கிவிட்டது. பின்னர் இன்னொரு சிறு கல்லை மரத்துண்டில் வைத்துக் கட்டி ஆற்றில் வைத்தார். அது மெல்ல மிதந்து ஆற்றில் பயணம் செய்தது. பக்தர் புரிந்து கொண்டார்.
|
|
|
|