|
குரு ஒருவரிடம், ஞானம் அடைந்து விட்டால் ஒருவருடைய எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து விடுமா? என்று ஒருவர் கேட்பார். அதற்கு குரு எல்லாப் பிரச்னைகளும் சரியாகிவிட வேண்டும் என்பது பேராசை! என்று பதில் சொன்னார். ஞானம் அடைந்த பின்பும் எந்தப் பிரச்னையும் சரியாகாதா? பின் எதற்காக ஞானம் அடைய வேண்டும்? ஆச்சரியத்துடன் குருவிடம் கேட்டார் வந்தவர். பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லாப் பிச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை. எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை! தீர்க்கமாய் பதில் தந்தார் குரு.
|
|
|
|