|
வெளியூர்ப் பயணி ஒருவர் பாதையோரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு ஞானியைப் பார்த்து சுவாமி! குடியிருப்புப் பகுதி இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது! என்று கேட்டான். அதோ, அங்கே இருக்கிறது! என்று ஓரிடத்தைக் காட்டி விட்டுச் சென்றார், ஞானி பயணி வலதுபுறம் சென்று பார்த்தால் அங்கே மயானம் தான் காணப்பட்டது. மீண்டும் ஞானியிடம் சென்று சுவாமி! நான் கேட்டது குடியிருப்புப் பகுதியை, ஆனால் நீங்கள் மயானத்தைக் காட்டுகிறீர்களே? எனக்கு ஒன்றும் புரியவில்லை! என்றான் எல்லோரும் எங்கோ இருந்து கடைசியில் இங்கே வந்து தங்கி விடுகிறார்கள். இங்கே இருந்து யாரும் வெளியே சென்று தங்குவதை நான் பார்த்ததில்லை. எனவே, என்னைப் பொறுத்தவரை இதுதான் உண்மையான குடியிருப்புப்பகுதி! என்று கூறிவிட்டுச் சென்றார் ஞானி.
|
|
|
|