|
குரு ஒருவர் சந்தோஷமான மனநிலையின் போது சீடனை சதுரங்கம் விளையாட அழைத்தார் குரு. தன் குருநாதரை மனதில் நினைத்து, அவருடைய ஆசியை வேண்டி பிரார்த்தித்துவிட்டு ஆட ஆரம்பித்தார். சீடனோ எதிரில் இருந்த தன் குருவின் பாதங்களைப் பணிந்துவிட்டு ஆட ஆரம்பித்தார். அவர்கள் ஆடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் சீடர்தான் ஜெயித்தார். குருவிற்கு அது எதனால் எனப்புரியவில்லை. என்னதான் திறமைசாலி என்றாலும் எப்படி எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்க முடிகிறது? ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நிறுத்திவிட்டனர். சில நாட்களுக்குப் பின் குரு தன்னுடைய குருநாதரைச் சந்தித்தார். அப்போது, எப்படி சீடரால் எல்லா ஆட்டங்களிலும் ஜெயிக்க முடிந்தது? என்று தன் சந்தேகத்தை குருவிடம் கேட்டார். குருநாதர் கூறினார். நீ என் துணையை நாடினாய். அதனால் என் அருள் உனக்குக் கிடைத்தது. உன் சீடன் உன்னை வணங்கினான். அதனால் நீ அவனுக்குத் தந்த அருளுடன் உன்னிடமிருந்த என் அருளும் சேர்ந்து அவனுக்குக் கிடைத்தது. அதனால்தான் மிக எளிதாக அவனால் உன்னை வெல்ல முடிந்தது என்றார்.
|
|
|
|