|
உத்தம குருவும் சீடனும் ஆசிரமத்திலிருந்து கிளம்பி காடு வழியே அடுத்த ஊருக்குச் செல்ல நடந்து கொண்டிருந்தார்கள். சீடனுக்கு அது சிரமமான நேரம், அவன் அன்றைய தினம் பாம்பு கடித்து இறந்து விடுவான் என்று விதி இருந்தது. அதை அந்த உத்தம குரு அறிந்தே இருந்தார். பயணம் தொடர்ந்தது. நடந்து நடந்து சீடனுக்குக் களைப்பு ஏற்பட்டது. அதனால் ஒரு மரத்தடியில் அவன் படுத்துக் கொண்டான். உத்தம குரு அவனுக்குப் பக்கத்திலேயே விழிப்பாக அமர்ந்துகொண்டார். சீடன் நன்கு தூங்கிய பிறகு ராஜ நாகம் ஒன்று அவன் தலைப் பக்கமாக ஊர்ந்து வருவதைக் கண்டார் குரு. ராஜ நாகமே நில்! என்று ஆணையிட்டார். சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நாகம் அப்படியே நின்றது. குரு கேட்டார், நீ எதற்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். இதோ தூங்கும் என் சீடனின் எந்த உறுப்பிலிருந்து உனக்கு ரத்தம் வேண்டும்? கழுத்து என்று சீறியது ராஜநாகம். அப்படியே நில், நானே உனக்குத் தருகிறேன் என்ற குரு தன்னிடமிருந்த கத்தியை எடுத்தார். சீடர் கழுத்தில் மெல்லியதாகக் கோடு போட்டார். ரத்தம் கசிந்தது. வலியை உணர்ந்த சீடன் உடனே கண் விழித்துப் பார்தான். தன் கழுத்தில் கத்தியை வைத்தபடி குரு இருப்பதைக் கண்டதும், கண்களை மூடி மீண்டும் உறங்கத் துவங்கினான். ராஜ நாகத்துக்குத் தேவையான ரத்தத்தைக் கொடுத்துவிட்டு அனுப்பிய குரு. சீடன் கண் விழித்ததும் கேட்டார், ஏன் கண்களைத் திறந்தாய்? பின்னர் ஏன் மூடிக்கொண்டாய்?என் கழுத்தில் கத்தியை உணர்ந்ததும் யாரோ என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கண்ணைத் திறந்தேன். ஆனால் கத்தியைப் பிடித்திருப்பது நீங்கள் என்பதால், எனக்கு நீங்கள் திறந்தேன். ஆனால் கத்தியைப் பிடித்திருப்பது நீங்கள் என்பதால், எனக்கு நீங்கள் எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். உண்மையான குரு, உண்மையான சிஷ்யன் பற்றிய இந்த சத்ய வாக்கு கதையைப் படித்தபோது எனக்கு வேறு ஒன்று தோன்றியது. குரு என்பதற்குப் பதிலாக அந்த இடத்தில் கடவுளை வைத்துப் பாருங்கள். சில உண்மைகள் உங்களுக்குப் புரியவரும். அந்த சீடன் போல கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்தால் போதும். நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் ஏற்படலாம். அந்தப் பாம்பு போல் உயிருக்குக் கூட ஆபத்து நேரிடலாம். ஆனால் நாம், கடவுள் நம் அருகில் இருக்கிறார் என்பதை உணர வேண்டும். அவர் பார்த்துக் கொள்வார் என்று முழுமையாக நம்பவேண்டும். நமக்கு ஏற்படும் சிறு சிறு சோகங்களைக்கூட, கடவுள்தான் அந்த குருவைப் போல, பாம்புக் கடியிலிருந்து தப்பிக்க கொஞ்சம் ரத்தம் மட்டும் தந்ததைப் போல, பெரிய பிரச்னையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விதியையே மாற்றி, அதன் அடையாளமாக சின்னதாய் வலி தந்திருக்கிறார் என்று உணரவேண்டும்.
|
|
|
|