|
மலையாளக் கவிஞர் பூந்தானம், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு காட்டு வழியே சென்றுகொண்டிருந்தபோது ஒரு திருடனிடம் சிக்கிக்கொண்டார். அப்பனே நான் கோயிலக்குச் சென்று கொண்டிருக்கிறேன். என்னை ஒன்றும் செய்யாதே என்றார். ஆனாலும் திருடன் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான். அப்போது அங்கு வந்த வழிப்போக்கர் ஒருவர், திருடனிடமிருந்து அவரைக் காப்பாற்றினார். ஐயா! இனி நீங்கள் தைரியமாக கோயிலுக்குச் செல்லலாம்... இனி யாரும் தடுக்க மாட்டார்கள். தன்னைக் காப்பாற்றிய வழிப்போக்கருக்கு அன்பளிப்பாக நான் மோதிரத்தை அளித்தார் கவிஞர். அவர் ஏற்க மறுக்கவே அன்புடன் அவர் விரலிலேயே போட்டுவிட்டார். ஐயா! இதை என் அன்புப் பரிசாக நீங்கள் ஏற்கத்தான் வேண்டும் என்று, உங்கள் விரலில் நானே அணிவிக்கிறேன். வழிப்போக்கர் ஒரு புன்னகையுடன் சென்று மறைய பயமின்றி குருவாயூர் கோயிலை அடைந்த பூந்தானம், குருவாயூரப்பனின் விரலைத் தனது மோதிரம் அலங்கரிக்கக் கண்டு மெய்சிலிர்த்தார். ஆஹா... ஆஹா... பரந்தாமா... இந்த பக்தனைக் காத்திட நீயே மானிட வடிவம் கொண்டு வந்தாயா... குருவாயூரப்பா... என்னே உன் கருணை! |
|
|
|