|
ஞானி ஒருவர் தன் சிஷ்யர்களை அழைத்துக்கொண்டு கொளுத்தும் வெயிலில் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் தாகத்தைத் தீர்க்கவோ தானம் பெற்றுச் சாப்பிடவோ வழியில்லை. இரவு வந்தது. எல்லாரும் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்குத் தயாரானார்கள். ஆண்டவனே! இன்று நீ எங்களுக்குத் தந்த எல்லாவற்றுக்கும் நன்றி! என்று ஞானி பிரார்த்தனை செய்தார். சீடர்கள் இன்றுதான் ஆண்டவன் நமக்கு எதையும் தரவில்லையே. பின் எதற்காக நன்றி சொல்கிறீர்கள்? என்று ஞானியிடம் கேட்டனர். அதற்கு ஞானி, ஆண்டவன் இன்று நமக்கு எதையும் கொடுக்கவில்லை என்று யார் சொன்னது? ஆண்டவன் இன்று நமக்கு பசியைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பசி மூலம் ஒரு நல்ல தத்துவத்தையும் கொடுத்திருக்கிறார். அதற்காகத்தான் ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்! என்றார். சீடர்கள் புரியவில்லையே! என்றார்கள். ஞானி சிரித்துக்கொண்டே இந்த காட்டில் நிறைய கொடிய விலங்குகள் இருக்கின்றன. அவையும் பசியோடு இருக்குமே? அந்தப் பசிக்கு நம்மை இரையாக்காமல் பாதுகாப்போடு இதுவரை கொண்டு வந்திருக்கிறானே, அதற்குத்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்! என்றார் ஞானி.
|
|
|
|