|
அழுது கொண்டிருந்த இளைஞன் ஒருவனிடம் மகான் ஒருவர், ஏன் அழுகிறாய்? எனக் கேட்டார். என் தந்தை இறந்துவிட்டார் ஸ்வாமி! அதற்காக அழுகிறேன்! அவருக்காக அழும் நீ, உனக்காக அழுதிருக்கிறாயா? என்றார் மகான். இளைஞனுக்குப் புரியவில்லை. நான்தான் உயிரோடு இருக்கிறேனே எனக்காக ஏன் அழ வேண்டும்? விளக்கம் கேட்ட அவனிடம் சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தைக் காட்டி இதிலிருப்பது யார்? எனக் கேட்டார் மகான். நான் குழந்தையாக இருந்தபோது எடுத்த படம்! என்றான். அந்தக் குழந்தை இப்போது எங்கே? எனது படம் என்று சொல்லிவிட்டு நானே எதிரில் நிற்கிறேன். பின் அந்தக் குழந்தை எங்கே எனக் கேட்டால் என்ன அர்த்தம் ஸ்வாமி? குழந்தை என்று நிலை செத்துப் போனால் நீ சிறுவனாகிறாய் சிறுவன் என்கிற நிலை செத்துப்போய் இளைஞாகியிருக்கிறாய். வருங்காலத்தில் இந்த நிலையும் செத்துப் போய் முதியவனாவாய். ஏற்கெனவே நடந்த இந்த இழப்புகளுக்கெல்லாம் அழுதிருக்கிறாயா? என்று கேட்டார் மகான். அவரது கேள்விகள் இளைஞனுக்குள் தெளிவை உண்டாக்கியது. மறைவுகள் எல்லாம் மாற்றங்களே! என உணர்ந்தான், இளைஞன். |
|
|
|