Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சி !
 
பக்தி கதைகள்
உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சி !

வானத்தில், மிக உயரத்தில் கருடன் ஒன்று பெருமிதமாக வட்டமிடித்துக் கொண்டிருந்தது.
ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த இரண்டு குருவிகள் இதைப் பார்த்தன.
கருடனைப் போல அவ்வளவு உயரத்தில் பறக்க முடியவில்லையே என்று ஏக்கம் அடைந்தது ஒரு குருவி.
இன்னொரு குருவியிடம், நமக்கு இறக்கைகள் இருந்து என்ன பயன்? பறந்தால் அந்தக் கருடனைப் போல அவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும். இல்லாவிட்டால் இறக்கைகளை எரித்துக்கொண்டு சாவது நல்லது என்றது.
அறிவும் அனுபவமும் நிறைந்த இன்னொரு பறவை, நண்பா! நாம் குருவிகளாகப் பிறந்திருக்கிறோம். இன்னொரு குருவியைப் பார்த்து ஏக்கம் கொள்வதில் பொருள் உள்ளது. கருடனைப் பார்த்து பொறாமைப்படுவதில் பயனில்லை.
அதன் தேவை வேறு; நம் தேவை வேறு! நம்மைப் போல பறக்க முடியவில்லையே என்று வெட்டுக்கிளிகள் மனமொடிந்து விடவில்லை என்பதைப் பார். உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். பிறரைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள், என்ன கிடைத்தாலும் திருப்தி பெற மாட்டார்கள்; நிம்மதியாகவும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட எண்ணத்தை விட்டுவிடு என்று அறிவுரை சொன்னது.

இது குருவிக்கு மட்டும் தானா?- யோசிக்க வேண்டிய விஷயம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar