Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எதற்கெடுத்தாலும் மோதலா?
 
பக்தி கதைகள்
எதற்கெடுத்தாலும் மோதலா?

ஒரு காட்டுப்பன்றி மிகுந்த தற்பெருமை மிக்கதாக இருந்தது. காட்டிலுள்ள மரங்களை பார்த்த அந்தப் பன்றி, ""இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன. இவற்றைப் போல என்னால் வளர்வதென்பது முடியாத காரியம். ஆனால், இந்த மரங்களை என்னளவுக்கு குறுக்கி விட்டால் என்ன என்று கணக்குப் போட்டது. ஒவ்வொரு மரத்தின் மீதும் தாவிக்குதித்து மேலே ஏறி, கிளைகளின் மீது நின்று அவற்றை ஒடித்துத்தள்ள முயன்றது.கிளைகள் வளைந்ததே தவிர ஒடியவில்லை. பன்றிக்கோ கடும் கோபம். இந்த மரங்கள் இங்கே நின்றால் தானே உயரம் பற்றிய கவலை! இவற்றின் மீது முட்டிமோதினால் மொத்த மரங்களும் சாய்ந்து போகுமே என்று முட்ட ஆரம்பித்தது. மரம் சாயுமா என்ன! பன்றிக்கு தான் உடம்பெல்லாம் காயம். ரத்தம் வழிந்தது.ஒரு கட்டத்தில், தன் முயற்சியில் தோல்வியுற்று, ரத்தம்அதிகமாக வெளியேறி பன்றி இறந்தே போனது.இது மாதிரி தான், யாரைப் பார்த்தாலும் அவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து பேசி, தங்கள் மூக்கை உடைத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், யாரைப் பார்த்தாலும் மோதல் என்பதை கை விடுங்கள். அவர்களைப் போல உயர வேண்டும் என்பதற்காக பொறாமையுடன், அவர்கள் செய்யும்செயலைப் போலவே நீங்களும் செய்யமுயலாதீர்கள். கடவுள் நமக்கு என்னதகுதியைக் கொடுத்திருக்கிறானோ, அதற்கேற்ப செயல்படுவதே வெற்றியளிக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar