|
சீடர் கேட்டார்: சிதை கொடியதா! சிந்தை கொடியதா! வேதகுரு சொன்னார்: சிதையை விட சிந்தையே கொடியது. "சிதை உயிரற்ற உடலைத் தான் எரிக்கும். உணர்ச்சியற்ற உடலை எரிப்பதால், அதற்கு என்ன சிரமம் வந்து விடப்போகிறது! ஆனால், சிந்தை நடந்தவற்றையும், நடக்கப் போகிறவற்றையும் எண்ணி எண்ணி உயிருடன் உடலை எரிக்கிறது. மனதைக் காயப்படுத்துகிறது. "அவன் எனக்கு செய்த துரோகத்தை நினைத்தால் வயிறு எரிகிறதே! "என் வயிறு எரியும்படியாக அவன் நடந்து கொள்கிறானே! "உடம்பெல்லாம் பற்றி எரியும்படி நடந்து கொள்கிறானே! என்று மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். வேதத்திலேயே சிதையை விட சிந்தை தான் கொடியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நல்ல சிந்தனைகள் மட்டும் மனதில் பிறக்கட்டும். |
|
|
|