|
புகழையும் பெருமையையும் விரும்பாத ஞானி ஒருவர் தன் நாட்டில் இருப்பதை அறிந்தான் ஓர் அரசன். அவரைத் தேடிச் சென்று நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பினை ஏற்றிட வேண்டினான். அரசே, எனக்கு அந்தப் பதவி வேண்டாம். அதனை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை! என்று மறுத்தார் ஞானி. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உங்களை விட தகுதியானவர் கிடையாது! என்றான் மன்னன். பார்த்தாயா, நீயே என்னைப் பொய்யன் என்கிறாய். பொய்சொல்பவன் எப்படி நீதிபதியாக இருக்க முடியும்? சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்தார் ஞானி.
|
|
|
|