|
விரத வழிபாடுகளில் நம்பிக்கை உள்ள பக்தன் ஒருவன் யாத்திரை மேற்கொண்டான். ஒருகாட்டின் வழியே சென்ற போது உணவும் நீரும் கிடைக்காமல் பெரும் துன்பப்பட்ட அவன், வழியில் ஒரு கிணறு இருந்ததைக் கண்டான். எட்டிப்பார்த்தவன்,மிகவும் ஆழத்தில் நீர் இருப்பதை அறிந்தான். உடனே கயிறு, வாளி என ஏதாவது கிடைக்குமா என்று தேடத் தொடங்கினான். அப்போது தாகத்தால் களைத்திருந்த மான் ஒன்று அங்கே வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. மறுகணம் கிணற்று நீர் சட்டென உயர்ந்து மேலே வர, மான் அதனைக் குடித்து விட்டு ஓடியது. இறைவன் கருணை அது என உணர்ந்த பக்தன், தனக்கு உதவாதது ஏன் என்று கடவுளை வேண்டிக் கேட்டான். உடனே எழுந்த ஓர் அசரீரி மகனே! நீ கயிறையும் வாளியையும் நம்பி அவற்றைத் தேடினாய். ஆனால் மான், முழுமையாக என்னை நம்பியது! அதனால்தான் அதற்கு உடனே பலன் கிடைத்தது...! எனச் சொல்லி மறைந்தது.
|
|
|
|