|
ஞானி ஒருவரின் சீடன் மிகவும் வருத்தத்துடன் வந்தான். காரணம் கேட்டார் ஞானி. தன்னைப் பிச்சைக் காரன் என்று சிலர் திட்டு விட்டதாகச் சொன்னான் அவன். அதைக் கேட்ட ஞானி, அடடா.. இதற்காகவா நீ வருந்தி அழுகிறாய்? எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் மனைவியை அவர் கன்னிகாதான மாகவே பெற்றிருப்பார். கல்வி என்பது தந்தை அளிக்கும் பிச்சை. அறிவு, ஞானம் எல்லாம் குரு போடும் பிச்சை. இப்படி எல்லோருமே எதாவது ஒரு வகையில் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், வாமனராக வந்து மகா விஷ்ணுவும், பிட்சாடனராக சிவபெருமானும் பிச்சை எடுத்திருக்கிறார்கள். மகான்கள் பலரும் பிட்சை எடுத்தவர்கள் தான். எனவே வருத்தப்படுவதை விட்டுவிட்டு, இப்படிப்பட்டவர்களுடன் உன்னையும் சேர்த்துப் பேசியிருக்கிறார்கள் என நினைத்து சந்தோஷப்படு...! என்றார், அமைதியாக.
|
|
|
|