|
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்க்க நேர்கிறது. உடனே எதிரே தெரிவது இன்னொரு மாடு என்று எண்ணுகிறது. முட்டுகிறது. அதனோடு மோதுகிறது. கண்ணாடி உடைந்து மாட்டின் மீது பட்டு இரத்தம் சொட்ட நிற்கிறது. ஒரு மனிதன் தன்னைக் கண்ணாடியில் பார்க்கிறான். இன்னொரு மனிதன் அவன் என்றா எண்ணுகிறான்? இரண்டும் ஒன்றே என்று தெரிந்து சாந்தமாக இருக்கிறான். அரை மணி நேரம் ஆடை, அலங்காரம் புனைந்து ஆனந்தமாக கண்ணாடி முன்பு நின்று கவனிக்கிறான். இன்னொன்று என்று எண்ணாமல் ஒன்றே என்று தெரிந்து கொண்டால் எத்தனை மகிழ்ச்சி! நாம் பார்க்கிற அனைத்தும் ஒன்றே என்ற ஞானம் நமக்கு வந்து விட்டால், ஆசை, கோபம், பாபம், காரியம், ஜனனம், துன்பம் எதுவும் இல்லை!
|
|
|
|