|
அந்த மன்னர் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றிருந்தார். வேட்டையாடி முடித்தபின்பு குதிரையை ஒரு மர நிழலில் அமர்ந்தார். சற்றே கண்ணயர்ந்தார். மரத்தின் மேல் ஒரு அன்னப் பறவையும் ஒரு காக்கையும் உட்கார்ந்து கொண்டிருந்தன. காக்கை கபடமானது. அரசரின்மீது எச்சமிட்டுவிட்டுப் பறந்து சென்றுவிட்டது. வேந்தருக்குச் சினம் பொங்கியது. வேகத்தில் அம்பு விடுத்தார். காகம் தான் பறந்து சென்று விட்டதே! அரசர் விடுத்த அம்பு அன்னப் பறவையைத் தாக்கியது. துடிதுடித்து வீழ்ந்தது அன்னப்பறவை! நீரைப் பிரித்து பாலை நேர்த்தியுடன் அருந்தும் நீயா வீழ்ந்தாய்! நீ அன்னம்தானே, காகம் அல்லவே என்றார் வேந்தர். அன்னம்தான்! இருந்தாலும் தீய காகத்துடன் தோழமை பூண்டேன்! அதன் பயணைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்றது அன்னப் பறவை.
|
|
|
|