|
ஒரு துறவியை சந்தித்து ஒருவன், சுவாமி! உலகில் மிகப் பெரிய பாவம் எது? என்று கேட்டான். எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. அதுபோல எந்தப் பாவம் செய்தாலும் அதைப் போக்கிக் கொள்ளலாம். ஆனால் நன்றி மறந்த பாவத்தைப் போக்க முடியாது. அதுவே மிகப் பெரிய பாவம்! என்றார் துறவி.துறவி ஒருவரைச் சந்தித்த செல்வந்தன் ஒருவன், பணத்தால் வாங்க முடியாத பொருட்கள் ஏதும் உள்ளதா? என்று கேட்டான். அதற்கு துறவி, குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைப்பது. முதுமை அடைந்தவர்க்கு மீண்டும் இளமை தருவது. நல்ல மனிதனின் அன்பைப் பெறுவது. இறையனுபவம் பெறுவது இந்த நான்கும் செல்வத்தால் வாங்க முடியாதவை என்று சொன்னார்.
|
|
|
|