|
நீராட ஆற்றுக்குச் செல்லும் முன், ஞானி ஒருவர், சீடர்களிடம் சில பச்சிலைகளைக் கொடுத்து அரைத்து வைக்கச் சொன்னார். தங்கள் வேலைகளில் மூழ்கியபடியே சீடர்கள், இறைவனிடம் என்ன பிரார்த்தனை செய்யலாம் எனப் பேசிக் கொண்டனர். உறவு கேட்கலாம் என்றான் ஒருவன், பலம் கேட்கலாம் என்றான் இரண்டாமவன். மூன்றாமவன் அறிவு கேட்கலாம் என்றான்; நான்கமவனோ அமைதியைக் கேட்கலாம் என்றான். அன்பை வேண்டுவதே மேல் என்றான் ஐந்தாமவன். தியாக உணர்வுதான் முக்கியத் தேவை என்றான் கடைசி சீடன். அச்சமயம் ஆசிரமம் திரும்பிய ஞானி, வீண் பேச்சில் ஏன் நேரத்தைக் கடத்துகிறீர்கள்? முதலில் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் கேட்பதைக் காட்டிலும் உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்க இறைவன் தயாராகவே இருக்கிறான் என்றார் புன்னகையுடன்.
|
|
|
|