Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நைவேத்தியம்
 
பக்தி கதைகள்
நைவேத்தியம்

இளைஞன் ஒருவன் சிறந்த பக்தன். தினமும் கடவுளுக்குப் பூஜை செய்வான். பழங்கள், இனிப்புகளை அவருக்கு நிவேதனம் செய்வான். தீபமங்கள ஜோதி நமோநம, தூய அம்பல லீலா நமோ நம, கர்ப்பூர நீராஜனம் தரிசையாமி என்று ஸ்லோகங்கள் கூறி கொண்டிருந்தான். அப்போது அவனுடைய நண்பன் அங்கே வந்தான். வா வா. இப்போதுதான் நைவேத்தியம் செய்தேன். சாப்பிடு, இந்தா.. என்று நைவேத்தியத்தை கொடுத்தான். நீ தினமும் பூஜை, நைவேத்தியம் என்று செய்கிறாயே. நீ பூஜையில் வைத்த பழங்கள் அப்படியேதான் இருக்கின்றன. பகவான் அதைச் சாப்பிடுவதில்லையே! என்று வினாவினான்.  இதற்குப் பதிலை உனக்கு நாளை சொல்கிறேன்.

மறுநாள் நண்பர்கள் இருவரும் ஒரு கூட்டத்திற்குச் சென்றார்கள். நண்பரின் கையில் பெரிய ரோஜா மாலை இருந்தது. அவன் அனைவரையும் பார்த்தவாறு எல்லாருடைய கையிலும் மாலை இருக்கிறதே என்று ஆச்சரியமாக கேட்டான். அதோ தலைவர் வருகிறார். அவருக்கு மாலை போடவேண்டும். வா, சற்று அருகில் போகலாம் என்று அழைத்தான். திறந்த காரில் வந்து கொண்டிருந்த தலைவருக்கு எல்லாரும் மாலை அணிவித்தார்கள். இளைஞனின் நண்பனும் அருகில் சென்று வாழ்க வாழ்க! நீடூழி வாழ்க! தலைவர் வாழ்க! தலைவர் வாழ்க வாழ்க! என்று கூறியபடி மாலை போட்டான். உடனே இளைஞன் உன் தலைவர் எல்லாருடைய மாலைகளையும் அணிந்து கொள்ளவில்லையே! என்று கேட்டான். நூற்றுக்கணக்கான மாலைகளை ஒருவர் சுமப்பது என்பது முடியக்கூடியதா? என்று கூறினான். அதோ பாரேன். கூட்டத்தை நோக்கி மாலைகளை வீசுகிறார் என்று எதிர்பார்த்து நின்றபோது தலைவர் வீசிய மாலைகளில் ஒன்று நண்பனுக்குக் கிடைத்தது. நண்பனுக்குப் பெரு மகிழ்ச்சி. தலைவருக்கு மாலையிடுவதைவிட, அதை அவர் திருப்பி உனக்கே அளித்ததில் உனக்கு சந்தோஷம் இல்லையா? என்று கேட்டான். அதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றான். நீ கொடுத்த மாலையை உனக்கே உன் தலைவர் திருப்பித் தரும்போது சந்தோஷப்படுகிறாயே, அதுபோல நானும் கடவுளுக்குப் படைத்துவிட்டு அந்த நைவேத்தியத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். புரிகிறதா? என்று உணர்த்திய போது நண்பன் நன்றாகப் புரிகிறது என்றான். பகவான், பக்தர்களின் காணிக்கையை, நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார் என்ற திடநம்பிக்கையுடன் செய்தால், நிச்சயம் அவர் ஏற்றுக் கொள்வார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar