|
ஒருவன் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். கடலில் அலைகள் ஆர்ப்பரித்தன. இடி, மின்னல், மழை! படகு தடதட வென ஆடிற்று. இளம் மனைவி நடுங்கினாள். ஆனால் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்டாள். உங்களுக்கு பயமாக இல்லையா? கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான். அவளோ பயப்படாமல் சிரித்தாள். இந்த கத்தி, பயங்கரமானதுதான், கூர்மையானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர். அதனால் பயமில்லை. கணவன் புன்முறுவலோடு, இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும் பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு பயமில்லை என்றான்.!
|
|
|
|