Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரு கதை... ஒரு தீர்வு !
 
பக்தி கதைகள்
ஒரு கதை... ஒரு தீர்வு !

நண்பனின் வீட்டுக்குள் நான் நுழையவும், அவனுடைய தம்பி வெளியே வரவும் சரியாக இருந்தது. என்னைப் பார்த்ததும் புன்னகைத்தான். நலம் விசாரித்து, இரண்டு நிமிடங்கள் பேசியபின் புறப்பட்டுச் சென்றான். உள்ளே நுழைந்ததும் நண்பனிடம், உன் தம்பி ரொம்ப நல்ல டைப்! என்றேன். நண்பனின் முகம் எரிச்சலை வெளிப்படுத்தியது.
ஹூம்... நீ மட்டும்தான் பாக்கி! நீயும் என்னைப் பற்றி ரெண்டு வார்த்தை மட்டமாகச் சொல்லிவிடு ! பூர்த்தியாயிடும் என்றான்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நண்பனின் எரிச்சலுக்கான காரணம் புரியாமல், குழப்பத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அவனே விளக்கினான்.
என் தம்பியைப் போல சோம்பேறி யாரும் கிடையாது. ஆனால், அவனை எல்லாரும் பாராட்டுகிறார்கள். கடுமையாக உழைக்கும் எனக்குத்தான் கெட்டப்பெயர் என்றான்.
உன் தம்பி அவ்வளவு சோம்பேறியா? என்று கேட்டேன்.

சந்தேகம் என்ன? நேற்று அம்மா, மூர்த்தி மழை பெய்யுதான்னு பாரு. வானம் இருட்டிக்கிட்டு இருக்கு. மொட்டை மாடியில் துணி காயப் போட்டிருக்கேன்னு குரல் கொடுத்தாங்க. ஆனால், என் தம்பி இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லையே! ஜானி... கொஞ்சம் வெளியே போயிட்டு, உடனே வா ! என்று எங்கள் வீட்டு நாய்க்குக் கட்டளை போட்டான். ஜானியும் வெளியே போய்விட்டு உள்ளே வந்தது. அதன் உடம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஆமாம், மழை பெய்யுதும்மா! ன்னு சொல்றான்.
நண்பன் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது; சிரமத்துடன் அடக்கிக்கொண்டேன். நண்பன் அடுத்த உதாரணத்தை விவரித்தான்.
மாத்திரை தீர்ந்துடுச்சு. நாளைக்குப் போடறதுக்கு கைவசம் மாத்திரை இல்லை. வாங்கிட்டு வான்னு சொல்வார் அப்பா. அப்பவும் உடனே போய் வாங்கி வரமாட்டான். அடுத்தநாள் காலையில், தன் நண்பன் வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பும்போதுதான் அந்த மாத்திரையை வாங்கிவிட்டு வருவான். அப்பாவும், நம்ம மூர்த்திகிட்டே ஒரு காரியம் சொன்னால், அதை மறக்காம செய்துடுவான்னு அவனைப் பாராட்டுவார்!

நண்பனின் மனக்குறை என்னவென்பது எனக்குப் புரிந்தது. அதேநேரம் என் பார்வை, கூடத்தில் மாட்டியிருந்த ஒரு படத்தின் மீது பதிந்தது. அது அனுமனின் படம் அல்ல. என்றாலும், அனுமன் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை நண்பனிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.
ராமாயண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ராமன் தரப்பில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருந்த நேரத்தில், ராவணனின் மகன் இந்திரஜித் களம் புகுந்தான். அதன்பின், நிலைமை கொஞ்சம் மாறியது.

திடுமென மறைந்துவிடும் வல்லமையும், பலவிதமான சிறப்பு ஆயுதங்களும் இந்திரஜித்திடம் இருந்தன. ஒரு கட்டத்தில், தன்னுடைய அஸ்திரத்தை ஏவி, லட்சுமணனையே மயக்கமடைய வைத்தான் இந்திரஜித்.

லட்சுமணனின் நாடித் துடிப்பு சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வந்தது. ராமனும் அவன் சேனையும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, ஜாம்பவான் ஓர் ஆலோசனையை முன்வைத்தார்.

வடபகுதியில் உள்ள ஒரு மலையில் சஞ்ஜீவினி என்ற மருத்துவத் தாவரம் இருக்கிறது. அதைக் கொண்டு வந்தால் லட்சுமணனைக் காப்பாற்றலாம் என்றார்.
வேகம் தேவைப்படும் இந்தச் செயலுக்கு அனுமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த கணமே, மின்னல் வேகத்தில் ஆகாயத்தில் தாவிப் பறந்தார் அனுமன். லட்சுமணனை மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அவர் மனத்தில் நிறைந்திருந்தது. ஆனால், கிளம்பிவிட்டாரே தவிர, அவருக்கு  சஞ்ஜீவினி தாவரம் குறித்து வேறு எந்தத் தகவலும் தெரியாது. ஜாம்பவான் கூறிய அடையாளங்களைக் கொண்டு, அந்த மலையைக் கண்டுபிடித்தார். ஆனால் அந்த மலையின் மீது பல மரங்களும், செடிகளும் இருந்தன. இவற்றில் எது சஞ்ஜீவினி? பார்க்கப் பார்க்க அவருக்குக் குழப்பம்தான் ஏற்பட்டது.
அருகிலிருந்த சிலரைக் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் தெரியவில்லை. குழப்பம் அதிகமானது. விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. என்ன செய்யலாம்?!
சற்று யோசித்தவர், ஜெய் ஸ்ரீராம் என்று உரைத்துக் குரல் கொடுத்தபடி, அந்த மலையின் கீழ்ப்புறமாகத் தன் கைகளைச் செலுத்தினார். பலம் கொண்ட மட்டும் மலையை அசைக்க முயற்சித்தார். அடுத்த கணம் அந்த அதிசயம் நடைபெற்றது. மலை பெயர்ந்து, அனுமனின் கையில் இருந்தது.
அதைத் தூக்கிக்கொண்டு வானில் பறந்தார். விரைந்து வந்து போர்ப் பாசறையை அடைந்தார். மூலிகையை எதிர்பார்த்திருந்த அனைவரும், மலையுடன் அனுமன் வந்ததைப் பார்த்துத் திகைத்தனர். ஜாம்பவான் புரிந்து கொண்டார். அந்த மலையைத் தன் கண்களால் வேகமாக ஆராய்ந்தார். சஞ்ஜீவினி தாவரம் அங்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனடியாக அந்தத் தாவரத்தின் இலைகளில் இருந்து சாறெடுத்து லட்சுமணனின் வாயில் பிழிந்தார். அடுத்த சில நொடிகளில், லட்சுமணன் கண் விழித்தான். அவன் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. அவனைத் தொடர்ந்து, அடிபட்டுக் கிடந்த ராமனின் பிற படைவீரர்களுக்கும் சஞ்ஜீவினி மூலிகை மருத்துவம் அளிக்கப்பட்டது. அனைவரும் உற்சாகமாகக் கண் விழித்தனர்.
இந்தக் கதையுடன் நின்றுவிடாமல், மேலும் சில விஷயங்களையும் நண்பனிடம் பகிர்ந்துகொண்டேன்.
தற்போது, நிர்வாக மேலாண்மையில் பணி செய்வதை இரண்டு விதமாகப் பிரிக்கின்றனர். ஒன்று ஹார்டு வொர்க். மற்றொன்று ஸ்மார்ட் வொர்க். அனுமன் செய்தது ஸ்மார்ட் வொர்க்.
அவர் ஹார்டு வொர்க் செய்திருந்தால், ஜாம்பவானிடம் மீண்டும் வந்து சஞ்ஜீவினி மூலிகை எப்படியிருக்கும் என்ற விவரத்தைக் கேட்டுக்கொண்டு, மறுபடியும் வடக்கே சென்று அந்தத் தாவரத்தை எடுத்து வந்திருப்பார், ஆனால், அனுமனுக்குத் தெரிந்திருந்தது, தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் லட்சுமணனுக்கு ஆபத்து என்று. அவரது ஸ்மார்ட் வொர்க் எல்லோரையும் காப்பாற்றியது.
உன் தம்பி மூர்த்தி ஸ்மார்ட் வொர்க் செய்கிறான். அதாவது, தேவையானதை மட்டும் கச்சிதமாகச் செய்கிறான். எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்துச் செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவு இருக்கிறது அவனிடம். இது நெகட்டிவ் குணம் அல்ல. குறுக்குவழி என்று இதைக் குற்றம் சொல்வதும் சரியல்ல என்றேன்.
நண்பன் சிந்தித்தபடி... சற்றுமுன் கூடத்தில் என் பார்வை பதிந்த அதே படத்தை இப்போது உற்றுநோக்கினான்.
அங்கே, ஞானப் பழத்தைப் பெறும் போட்டியில் முருகப்பெருமான் ஹார்ட் வொர்க் செய்துகொண்டிருக்க, பிள்ளையாரோ எனக்கு பெற்றோர்தான் உலகம் என்று கூறி, அவர்களை வலம் வந்து, மாங்கனியைப் பெற்றுக்கொண்டிருந்தார். ஸ்மார்ட் வொர்க்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar