|
மகான் ஒருவரிடம் வந்த பக்தன் சுவாமி! நான் இறந்த பிறகு சொர்க்கத்திற்கே போக வேண்டும். அதற்காக நான் இப் பிறவியில் என்னென்ன விரதங்கள், ஹோமங்கள் செய்ய வேண்டும்? எந்தெந்த புண்ணிய ஷேத்திரங்களுக்குச் செல்ல வேண்டும்? எந்தெந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பதையெல்லாம் தாங்கள் எனக்குச் சொல்லியருள வேண்டும்! என வேண்டி நின்றான்.
அவன் முகத்தை உற்றுநோக்கி உண்மையை உணர்ந்த மகான், சொன்னார், சொர்க்கத்தை உன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதைக் கவனியாமல் தூரமாகச் செல்கிறேன் என்று கூறி, சொர்க்கத்தை நீ நோகச் செய்துவிட்டாய், புரியவில்லை, சுவாமி! உனக்கு இப்பிறவியைக் கொடுத்த உன் தாய்தான் உன் சொர்க்கம். அவள் பாதங்களில் பணிவிடை செய்து, அவளை பாதுகாப்பதே உன்னை சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும், போய் உன்னைப் பெற்றவளை கவனி! என்றார்.
|
|
|
|