|
குரு ஒருவரிடம் பாடம் கற்கும் ஆவலில் வந்த மாணவன் ஒருவன், சுவாமி! மனித வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை உங்களால் சொல்லித் தர முடியுமா? எனக் கேட்டான். முடியாது என்றார் குரு. வாழ்வின் அர்த்தத்தைக் கற்றுத்தர முடியுமா, சுவாமி?என்னால் முடியாது! என்றார் குரு. சரி, சுவாமி, இறப்பைப் பற்றி அல்லது இறப்பிற்குப் பின் என்ன நடக்கும் என்பதையாவது உபதேசிக்க முடியுமா? என்னால் அதுவும் முடியாது! உன் உதட்டைப் பிதுக்கினார் குரு. ஒன்றுமே தெரியாத இவரிடம் பாடம் கற்பதைவிட, கம்மாயிருப்பதே மேல் என பரிகாசித்த அம்மாணவன் சென்றுவிட, நம் குரு ஏன் இப்படி நடந்து கொண்டார் என மற்ற சீடர்கள் அவரைப் பார்த்தனர். குரு சொன்னார். வாழ்க்கையைப் பற்றியும் அதன் அர்த்தத்தைப் பற்றியும் அனுபவித்துப் பார்த்துத்தான் அறிய வேண்டுமே தவிர, முன்பே தெரிந்து கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? நீங்கள் ஒரு இளநீரின் ருசி எப்படி இருக்கும் என யோசிப்பதை தவிர்த்து, அதனை சுவைத்துப் பாருங்கள். அதுதான் சிறப்பு! எனக் கூற தன் குருவின் மேதையைமை எண்ணி மகிழ்வுற்றனர் சீடர்கள்.
|
|
|
|