|
காலையிலிருந்து விறகுகளை வெட்டி, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, இருப்பிடத்தைச் சுத்தம் செய்து, மலர்கள் பறித்து சோர்வுற்றுப் போனான் ஒரு சீடன். இன்னும் சற்று நேரத்தில் தனது குருவை சந்திக்க வேண்டும் என்பதால் அவசரம் அவசரமாக இறைவழிபாட்டை முடித்தான். குருவின் இருப்பிடம் நோக்கி ஓடினான். இருந்தாலும், இன்று குரு சொல்லித்தந்தது போல கடவுளை வழிபடமுடியவில்லையே! என்ற குற்ற உணர்ச்சி அவன் மனதில் மேலோங்கியது. குருவே! இன்று நான் இறைவனை சரியாக வழிபடவில்லை. தினசரி எனக்கு அறிவைத் தா, துயரங்களிலிருந்து காப்பாற்று, நோய் நொடியில்லாத வாழ்வைக் கொடு என்று வேண்டிக் கொள்வேன். இன்று நேரப் பற்றாக்குறையால் இறைவனை வெறுமனே வணங்கிவிட்டு வந்துவிட்டேன். என் தவறை கடவுள் மன்னிப்பாரா? என்று கேட்டான். <புன்னகை பூத்த குரு, இல்லை மகனே! இன்றுதான் நீ உண்மையான வழிபாட்டை செய்து முடித்திருக்கிறாய். இதுநாள் வரை நீ வேண்டியதையே திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டிருந்தாய். இன்று நீ அதைச் செய்யவில்லை. அதாவது கடவுளை செவிடனென்றும், குருடன் என்றும், இரக்கமற்றவன் என்றும் நிந்தனை செய்வதைத் தவிர்த்திருக்கிறாய்! இதுவே சரியான பிரார்த்தனை அமைதியாகச் சொன்னார். |
|
|
|