|
இறைவனைக் காண ஆவல்கொண்ட ஒருவன் குருவைத் தேடிச் சென்று, தன் ஆசையைக் கூறினான். குரு, உன்னை நீ முதலில் கண்டுகொள். பின்பு, இறைவனைக் காண்பாய் என்றார். என்னை நான் எப்படி அறிவது? என்று வந்தவன் கேட்க, எதிரில் தெரியும் குளத்தில் போய் அதில் உன் உருவத்தைப்பார் என்றார் குரு. அவன் அங்கு சென்றபோது, குளத்தில் எருமைகள் நீந்திக் கொண்டிருந்தன. தண்ணீரும் கலங்கலாக இருந்தது. குளத்தில் அவனது உருவத்தை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அதை குருவிடம் சென்று கூறினான். மதியம் சென்று பார் என்றார் குரு. அவனும் உச்சி வேளையில் குளத்துக்குச் சென்று பார்த்தான். அப்போது எருமைகள் இல்லை. குளத்து நீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. குளத்தை எட்டிப் பார்த்தான். அவனால் அவனது உருவத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனும் நடந்ததைக் கூறினான். குரு, உனது உள்ளம், காலையில் நீ பார்த்த குளம்போல் கலங்கிக் கிடந்தது. அதனால் அதில் உன்னை நீ பார்க்க முடியவில்லை. மதியம் பார்த்த குளம்போல உள்ளத்தை நீ வைத்திருந்தால் அதில் உன்னையும் பார்க்கலாம், இறைவனையும் பார்க்கலாம் என்றார். |
|
|
|