Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தீக்ஷிதருக்கு சோதனை!
 
பக்தி கதைகள்
தீக்ஷிதருக்கு சோதனை!

அப்பைய தீக்ஷிதர் வடமொழியில் வல்லவர். வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்துறையும் மார்க்கசகாயர் இவருக்குக் குலதெய்வம். அந்த ஈஸ்வரன் மீது சம்போ மஹாதேவ தேவ என்ற பாடல் புனைந்துள்ளார். அதே ஸ்தலத்தில் மீனாக்ஷி- சுந்தரேஸ்வரர் கோயிலும் நிறுவியிருக்கிறார். தீக்ஷிதருக்கு சைவ- வைணவ பேதம் கிடையாது. காஞ்சி வரதரைத் தரிசித்து வரத ராஜ ஸ்தவம் என்ற பாமாலையும் இயற்றியிருக்கிறார். வேலூர் சிற்றரசன் சின்ன பொம்மராஜன் இவரைத் தன் சபையில் ஆஸ்தான வித்வானாக கவுரவித்திருந்தான். அந்த அவையில் தாதாசாரியார் என்ற வித்வானும் அங்கம் வகித்தார். அவருக்கு தீக்ஷிதரைப் பிடிக்கவில்லை. எனவே, தீக்ஷிதரை விரட்ட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். மன்னரின் பிறந்த நாள். ஒவ்வொரு புலவரும் கொற்றவனைப் பாடி பரிசு பெற்றுச் சென்றனர். தீக்ஷிதர் தன்னை வணங்குவோருக்கு இடதுகையை <உயர்த்தி ஆசி வழங்குவது வழக்கம். அன்று அரசர் நமஸ்கரிக்கவும் அவரையும் இடது கையை உயர்த்தியே வாழ்த்தினார்.

தாதாசாரியார் மன்னரிடம், மெத்தப் படித்த திமிர் தீக்ஷிதருக்கு. தங்கள் ஜன்ம நக்ஷத்திரத்திலும் இடது கரத்தாலா வாழ்த்துவது? கவுரி தேவி ஈசனின் வாம பாகத்தில்தானே <உறைகிறாள் என்ற பதில்வேறு. இரு கரத்தையும் சேர்த்து ஆசி வழங்கினால் குறைந்தா போய்விடும்! எல்லாம் தாங்கள் கொடுக்கும் இடம் என்று பொருமினார். மறுநாள் அரசவையில் வேந்தன் தீக்ஷிதரிடம் பண்டிதரே! இடக்கரத்தால் அபிஷேக, ஆராதனைகள் புரிவதில்லை. ஆண்டவனும், அரசனும் ஒன்றல்லவா? அப்படியிருக்க, நேற்று என்னை இடக்கரத்தால் வாழத்தியதேன்? என வினவினார். சபையே கல் லென்றிருந்தது. தீக்ஷிதர் நிதானமாக மன்னா! நீதி, நேர்மையுடன் தினமும் அக்னிஹோத்ரம், சிவபூஜை செய்யும் அந்தணனின் வலக் கையில் அக்னி வாசம் செய்வதாகப் புராணங்களும் வேதங்களும் உரைக்கின்றன. ஒழுக்கமும், கடமையும் தவறாத நான் எவர் முன்னும் வலக்கரத்தை உயர்த்தினால் அவர் பஸ்பமாகிவிடுவார். அதனால்தான் இடக்கையால் ஆசி வழங்கினேன் என விளக்கமளித்தார்.

அரசனும், தாதாசாரியாரும் நிறைவான வேதியனின் வலது கரத்தில் அக்னி இருக்கிறதா? இதென்ன புதுக்கதை? என்று வியப்போடு கேட்க, தீக்ஷிதர் அரசரிடம் உங்கள் ஓவியமொன்றைக் கொண்டு வரச் சொல்லுங்கள். நிரூபித்துக் காட்டுகிறேன் என்றார். சித்திரம் வரவழைக்கப்பட்டது. அதை, வலக்கையை உயர்த்தி ஜய விஜபீ பவ என வாழ்த்தி அவர் முடிக்கக்கூட இல்லை, ஓவியம் தீப்பற்றி எரிந்தது. சபையோர் விதர்விதிர்த்தனர். சின்ன பொம்மு அரியாசனத்திலிருந்து இறங்கி தீக்ஷிதரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு ஐயனே! கேட்பார் பேச்சைக் கேட்டு <உங்களைச் சந்தேகித்தது மாபெரும் குற்றம். அடியேன் பிழை பொறுத்தருள வேண்டும் என்று குரல் தழு தழுக்க வேண்டினான். தீக்ஷிதர் மன்னரை ஆலிங்கனம் செய்து, பலருக்கும் இந்த வினா மனதில் ஒளிந்திருக்கும். உண்மையை சபையில் உணர்த்த தாங்கள் அளித்த வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். எல்லாம் நன்மைக்கே என சமாதானம் செய்தார். மகான்களின் எந்தவொரு செயலிலும் நியாயம் இருக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar