|
வகுப்பு முடிந்ததும் தந்தை, அரசர், குரு மூவரில் யார் சிறந்தவர்? எனக் கேட்டான் சீடன். அரசன் பொன்னைப் போன்றவன்; தந்தை வெள்ளியைப் போன்றவர்; குரு இரும்பைப் போன்றவர் என்றார் குரு. அப்படியானால் குரு மற்ற இருவரை விட மதிப்பில் குறைந்தவரா? என்றான் சீடன். இல்லை. தங்கம், வெள்ளி இல்லாமல் வாழ முடியும். ஆனால், உணவு உற்பத்திக்கு கலப்பையும், அரிவாளும், கோடரியும் இல்லாமல் மனித வாழ்க்கை நன்கு அமையாது. அவற்றை உருவாக்க இரும்பு அவசியம். அதே போல நம் மனமும் குணமும் நல்ல வழியில் செல்ல குருவின் துணை மிகவும் அவசியம். எனவே, மூவரில் குருவே உயர்ந்தவர் என விளக்கமளித்தார் குரு. |
|
|
|