|
கேரளாவில், ஆரோமல் சேகவர் என்ற பெயர் கொண்ட வாள்சண்டை வீரர் இருந்தார். அவரது தங்கைஉண்ணியார்ச்சை. மிகச்சிறந்த பக்தை. அவளுக்கு அண்ணன் சேகவர் வாள் வித்தையைக் கற்றுக் கொடுத்தார். அவளும் வீராங்கனையானாள். அவளை குஞ்ஞிராமன் என்பவர்திருமணம் செய்தார். கணவர் வீட்டில் மாமியார் கடும் கண்டிப்புக்காரியாக இருந்தாள். கோயிலுக்கு போகக்கூடமருமகளை அனுமதிக்கமுடியாதென சொன்னாள். சிறுவயதிலிருந்தே பக்திஉணர்வுடன் வளர்ந்த உண்ணியார்ச்சைக்குஇதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில சமயத்தில் தன்னையும் மீறி கண்ணீர் சிந்தினாள்.ஆனால், உண்ணியார்ச்சை தன் கணவரிடம், நான் நம் கிராமத்திலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு போயே ஆக வேண்டும், என்று அடம்பிடித்தாள்.
அம்மாவுக்கு கட்டுப்பட்ட அந்தப் பிள்ளை என்ன செய்வதென யோசித்தார். உண்ணியார்ச்சைக்கு கோபம் தலைக்÷றிவிட்டது. அப்படியானால், உங்கள் அம்மா சொன்னது தான் இந்த வீட்டில் நடக்குமா? மனைவி என்பவள் வெறும் இயந்திரம் தானா? என்னை மட்டும் கோயிலுக்கு அனுப்பவில்லையோ... நடப்பதே வேறு, என்றவள், வாளைத் கையில் துõக்கி விட்டாள். குஞ்ஞிராமன் நடுங்கி விட்டார். மாமியாரும் வாலைச் சுருட்டிக் கொண்டாள். பெண்களின் நியாயமானசுதந்திரம்பறிக்கப்படக்கூடாது என்பதில்உண்ணியார்ச்சை உறுதியாக இருந்தாள்.அந்த கிராமத்திலுள்ள பெண்களை அப்பகுதியிலுள்ள ஒரு இனத்தின் தலைவன் பலவந்தப்படுத்தி வந்தான். உண்ணியார்ச்சையின் மீதும் அவனது பார்வை விழுந்தது.அவளைக் கடத்தி வரதன் ஆட்களைஅனுப்பினான்.வந்தவர்களை வாளால் வெட்டி குறை உடலாக அனுப்பினாள் உண்ணி.இதனால், தலைவன் ஆத்திரத்துடன் நேரில் வந்தான். வந்த பிறகு தான் அவள், வாள்சண்டை வீரன் ஆரோமலின் தங்கை என்றும், பெரிய வீராங்கனை என்றும் தெரிந்தது. அவன் ஓட்டம் பிடித்தான்.அவனை விரட்டிப் பிடித்த உண்ணியார்ச்சை,இனியும் இந்த கிராமத்துபெண்களிடம் வாலாட்ட மாட்டேன் என சத்தியம் செய். இல்லாவிட்டால் உன்னைஎமலோகம் அனுப்பிவிடுவேன், என்றுகர்ஜித்தாள். தலைவனும் சத்தியம் செய்தான். அந்த கிராமப் பெண்களுக்கு அதன்பின் ஆபத்து ஏதும்வரவில்லை.வாலாட்டும் ஆண்களை ஒடுக்க பெண்கள்பயப்படக் கூடாது. மேலும் தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். மாமியாருக்கும், கணவருக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றாலும், நியாயமானமன உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் தடைபோட்டால் எதிர்த்து நிற்க தயங்குவது கூடாது. இதுவே உண்ணியார்ச்சையின் வாழ்க்கையின் மூலம்பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். |
|
|
|