|
உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நானே பெரியவன் என்று ஆணவம் கொண்டு சண்டையிட ஆரம்பித்தன. நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. பார்வையில்லாத ஒருவன் உயிர் இருந்தும் இல்லாதவனே. அவனால் எதுவும் செய்யமுடியாது என்று கண்கள் இரண்டும் மற்ற உறுப்புகளைப் பார்த்து எகத்தாளம் பேசியது.காதும் தன் பங்குக்கு கூச்சலிட்டது. கூப்பிட்ட வார்த்தைக்கு என்ன என்று ஒருவரைக் கேட்க வைப்பதே நான் தான்! நான் இல்லாவிட்டால் இனிய பாடலை ரசிக்கத் தான் முடியுமா? என்றது. கை, கால்களோ உழைப்பின் அருமையை உணர்த்தி நின்றன.திடீரென மூளை, அட அறிவிலிகளே! நான் அல்லவா தலைமை இடத்தில் இருந்து கட்டளையிடுபவன்! உங்களை இயக்கும் சூத்திரதாரியே நான் தானே! என்ற புகழ்ந்து கொண்டது. நீங்கள் எல்லாரும் பேசுவது நன்றாக இருக்கிறது! சற்று பொறுத்திருங்கள். உயிர் இல்லாவிட்டால், உங்களின் நிலை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள் என்றது உயிர். இதையடுத்து மற்ற உறுப்புகளால் எதுவும் பேச இயலாமல் போனது. அதை நிரூபிக்கும் வகையில் உடலை விட்டுப் பிரிந்தது. ஆனால், எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அப்போது கடவுள் தோன்றி, அட முட்டாள்களே!
உங்கள் யாராலும் தனித்து யாராலும் இயங்க முடியாது. அனைவரையும் இயக்குபவன் நானே! அவரவர் கடமையறிந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று சொல்லி உடலுக்கு உயிர் அளித்தார். கடவுளே நம்மை இயக்க வல்லவர்.உனக்காகவே வாழ்கிறேன்!சீடன் ஒருவன், குருவே!கடவுளை அடைய நான்என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என கேட்டான்.குரு அவனிடம்,வேகமாக ஓடு! ஆனால், அதற்கு முன் கடவுளே! உனக்காகவே ஓடுகிறேன் என்று எண்ணிக் கொள், என்றார்.என்ன குருவே! கடவுளை அடைய வழி கேட்டால் ஓடச் சொல்கிறீர்களே! ஏன் உட்கார்ந்து கொண்டு ஏதாவது செய்ய வழியில்லையா? என்றான்.ஏன் இல்லை? தாராளமாகச் செய்யலாம். ஆனால்,உட்காருவதற்கும் நிபந்தனை உண்டு. கடவுளே! உனக்காகவே உட்காருகிறேன் என்ற எண்ணியபடி உட்கார். அவ்வளவு தான்! என்றார். ஓடிக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தால் போதுமா? ஜபம், தவம் ஏதும் தேவையில்லையா? என்று கேட்டான். தாராளமாய் செய்யலாம். ஆனால், ஒன்றை நினைவில் வை. கடவுளே! இவற்றையும் உனக்காகவே செய்கிறேன் என்று சொல், என்றார்குருநாதர்.அப்படியானால், கடவுளுக்காக இதைச் செய்கிறேன் என்னும் கருத்து தான் இங்கு முக்கியமாகிறது. செயலை விட கடவுளுக்கு அர்ப்பணம் என்பது தான் முக்கியமா? என்றான் சீடன்.செயலும் அவசியம் தான். செயல் இல்லாவிட்டால், மனதில் இவ்வகை பாவனையே தோன்றாது. எண்ணமும், செயலும் எப்போது ஒன்று படுகிறதோ, அப்போது தான் எதுவும் முழுமையடையும். கடவுள் விஷயத்தில் இது மிக மிக அவசியம், என்றார் குரு. |
|
|
|