Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காத்திருந்த கங்கை!
 
பக்தி கதைகள்
காத்திருந்த கங்கை!

கங்கையில் நீராட நாமெல்லாம் காத்துஇருக்கிறோம். ஆனால், தன் மீது ஒரு பக்தரின் கால் படாதா என்று காத்திருந்தாளாம் கங்கை. ஆச்சரியமாகஉள்ளதல்லவா! இதோ அந்த புண்ணியரின் கதை படித்து நாமும் புண்ணியம் தேடிக் கொள்வோம்.கங்கை பாயும் காசி அருகில்உள்ள சத்தியவிரதம் கிராமத்தில், பிருஹத்தபா என்ற தவசிதினமும் ஹரிகதை (தெய்வகதைகள்) சொல்வது வழக்கம். அதைக் கேட்க புண்ணியதாமா என்பவர் தினமும் தவறாமல் வந்துவிடுவார். பகலில் அதிதியாக வீடுதேடி வரும்விருந்தினருக்கு அன்னம் இடுவதும், மாலையில் ஹரிகதை கேட்பதும் தான் அவரின் அன்றாடப் பணி. இந்த வேலை காரணமாக, தனது கிராமத்தின் அருகில் இருக்கும் கங்கைநதியில் கூட நீராடியதில்லை. ஒருநாள் இரண்டுவிருந்தினர்கள், புண்ணியதாமாவின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை உபசரித்ததாமாவிடம், சுவாமி!இங்கிருந்து எவ்வளவு துõரம் போனால் கங்கை நதி வரும்? என கேட்டார். யோசித்த தாமா, நுõறு ஆண்டுகளாக இந்த ஊரில் வாழ்ந்தும், உண்மையில் கங்கை எவ்வளவு துõரத்தில் ஓடுகிறது என்பதை நான் பார்த்ததில்லை. ஏனென்றால் ஒருமுறை கூட கங்கையில் நீராடியதில்லை. நாலு மைல் துõரத்தில் கங்கை ஓடுவதாக ஊரார் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்! என்று பதிலளித்தார்.

இதைக் கேட்ட அவர்கள் முகம் சுளித்து, கங்கையில் நீராடாத உம்மைப் போல ஒரு பாவியை பார்க்க முடியாது. இங்கு சாப்பிட்டதே பாவம். ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து கங்கா என்று சொன்னாலே பாவம் தீரும் என்பார்கள். நீரோ, பக்கத்தில் இருந்தும் ஒருநாள் கூடநீராடாமல் இருப்பது மதியீனம்! என்று சொல்லி புறப்பட்டனர். செல்லும் வழியில், பாவியான புண்ணியதாமாவின் வீட்டில் சாப்பிட்ட பாவமும் தீர கங்கையிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டனர். கங்கையை அடைந்தனர். அந்த நதியோ பாலை நிலம் போல காட்சியளித்தது. சொட்டுத் தண்ணீர் இல்லை.என்ன ஆனதென்றே அவர்களுக்குப் புலப்படவில்லை.ஏதோதவறு செய்துவிட்டோம் எனமனதிற்குள் உறுத்தியது. அம்மா! கங்கா!இது என்னசோதனை. நாங்கள்செய்த தவறு என்ன என்பதை உணரச் செய்! என்று வேண்டினர். அவர்களின் முன் கங்கைகாட்சியளித்தாள்.பாக்கியசாலியானபுண்ணியதாமாவை நிந்தித்த நீங்கள் மகாபாவியாகி விட்டீர்கள். இங்கு வருபவர்களை உபசரிக்கும் புனிதப் பணியைச் செய்யும் அவரது புனிதமான பாதம் என் மீது ஒருநாளாவது படாதா என நான் ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறேன். முன்பின் தெரியாதவர்களுக்கு உணவிடுவதையும், ஹரிகதை கேட்பதையும் விட புண்ணியம் உலகில் வேறில்லை. அதன் மூலம் எல்லா புனித நதிகளிலும் நீராடிய புண்ணியம் ஒருவருக்கு உண்டாகும். புண்ணியதாமாவின் மனதை புண்படுத்திய நீங்கள் இருவரும், அவரிடம் மன்னிப்பு கோரும் வரை உங்கள் கண்களுக்கு தெரிய மாட்டேன் என்று விளக்கம் அளித்தாள். இருவரும் புண்ணியதாமாவை தேடிச் சென்று காலில் விழுந்தனர். மன்னிக்கும் படி அழுதனர். புண்ணியதாமா அவர்களை மன்னித்ததோடு, ஹரி கதை கேளுங்கள் என்று சொல்லிபிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்றார். அவர்களும் இரண்டு ஆண்டுகள் தங்கி ஹரிகதை கேட்டு பிராயச்சித்தம் தேடினர். பிறகு புண்ணியதாமாவுடன் கங்கையில் நீராட வந்தனர். புண்ணியதாமாவின் பாதம் தன் மீது பட்டதும் மகிழ்ந்த கங்கை பெருக்கெடுத்து ஓடினாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar