|
சென்னை அருகில் கூவம்என்ற தலம் இருக்கிறது. (கூவம் என்றால் நீர்நிலை, கிணறு என பொருள்) இவ்வூரில் வசித்தவர் நாரணர். பெரிய கொடை வள்ளல். இவ்வூரில்,பலரிடமும் நன்கொடை பெற்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யும்அடியவரும் இருந்தார். ஒருமுறை, நாரணரிடம் வந்து, ஐயனே! இன்னும் பத்துநாளில் குருபூஜைவருகிறது. என் இல்லத்துக்கு பல சிவனடியார்களும் விருந்துக்கு வருகிறார்கள். அந்நாளில், தங்களிடம் வந்து விறகு பெற்றுச் செல்கிறேன். தருவீர்களா! என்றார். வள்ளல் அவரிடம்,இத்தகைய தானத்தில் என் பங்களிப்பும் இருந்திடஅருள் செய்த தங்களுக்கு நன்றி. விறகு அந்நாளில் நிச்சயம் கிடைக்கும், வாருங்கள், என்றார். அன்றுமுதல் கடும் மழை பெய்து விறகு ஈரமாகி விட்டது. அடியவர் குறிப்பிட்ட நாளில் வந்து விறகு கேட்டார். வள்ளல் சற்றும் யோசிக்க வில்லை. தன் வீட்டை இடித்து உத்தரம், குறுக்கு கட்டைகள், கதவுகளைதனியாகப் பிரித்தார். அவற்றை வெட்டி அடியவரிடம் கொடுத்துஅனுப்பினார்.அடியவர் அதை எவ்வளவோ தடுத்தார். ஐயா! இந்த வீடு போனால் போகிறது. இன்னொரு வீடு கட்டிக்கொள்வேன். ஆனால், கொடுத்த வாக்கை உயிர் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும், என்றார். இப்படிப்பட்ட வள்ளல்களும், நியாயஸ்தர்களும்,நல்லவர்களும் வாழ்ந்த புண்ணிய பூமியில் நாம் வாழ்வது நமக்குப் பெருமை தானே! |
|
|
|