|
ஒரு வீட்டில் மாமியாருக்கும்,மருமகளுக்கும் எப்போது பார்த்தாலும் சண்டை.அந்த வீட்டுத்தலைவனுக்கோ, அம்மாவுக்கு பரிந்துபேசுவதா? மனைவிக்குப் பரிந்து பேசுவதா?யாருக்காகப் பேசினாலும், இன்னொருவரின் கண்டன அம்புக்கு ஆளாவோம் என்பது தெரியும்.ஏன் இப்படி சண்டை போடுறீங்க! அமைதியா இருங்க! சமாதானமா போங்க! என்று மட்டும் சொல்லுவான்.உடனே இருவருமேசீறுவார்கள்.ஏண்டா! உன் பொண்டாட்டி செய்யுற தப்பை நான் தட்டி கேட்டா உனக்கு பொத்துகிட்டு வருதோ! ஓடிப்போ நாயே என விரட்டுவாள் தாய். உங்க அம்மா பெரிய மகாராணி...இவளுக்கு அடங்கிப் போய் என்பிறந்த வீட்டு கவுரவத்தை அழிக்கச் சொல்கிறீரோ! என கத்துவாள் மனைவி.இவர்களின் இந்தக்கூச்சல் தாளாமல் ஓடியே போய்விடுவான் அவன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு வேண்டி, ஊர் பெரியவர் ஒருவரை அணுகி, தன் நிலையைச் சொன்னான்.இந்தா பாருப்பா! மாமியார், மருமகள் சண்டை ஊரிலே சகஜம் தான்!இதனாலே, ஆண்களோட நிம்மதி கெட்டுப்போறது நிஜம். அதற்காக,பிரச்னையைக் கண்டு ஓடக்கூடாது. மாதா சொல்வது நியாயமா! மனைவி சொல்வதுநியாயமா! என்பதைநீ முதலில் யோசி. யார் பக்கம் தவறு இருக்கிறதோ, அவர்களை நீ தான்அடக்க வேண்டும்.தாயிற் சிறந்ததொருகோயிலுமில்லை என்பது பெரியவர்களின் வாக்கு தான். அதற்காக, அந்தத்தாய் நியாயமற்ற முறையில் பேசுகிறாள் என்றால், அதைத் தட்டிக் கேட்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு வரும். எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் என்பதை நீ கேள்விப்பட்டிருக்கத்தானேசெய்கிறாய், என்று ஒரு சொற்பொழிவே நிகழ்த்தி விட்டார்.இதன்பின், அவன் யார் பக்கம் நியாயம் இல்லையோ அவர்களைக் கண்டிக்க ஆரம்பித்தான். வீட்டில் சண்டை குறைய ஆரம்பித்தது. |
|
|
|