|
கங்கைக்கரையில் திரிகடபா என்ற முனிவர் மனைவியுடன் வசித்தார். இவர்களுக்கு பாவன், புண்ணியன் என்று இரு மகன்கள்.திரிகடபாவும், அவரது மனைவியும் ஒரே நாளில் இறந்து போனார்கள். பிள்ளைகள் கங்கைக்கரையில் அவர்களுக்கு இறுதிக்கடன்களைச் செய்தனர்.பெற்றோரின் பிரிவைத் தாளாத பாவன், அழுதபடியே இருந்தான். புண்ணியனோ யதார்த்தமாக இருந்தான். ஊரார் பார்வையில், பாவன் பாசக்காரன் என்றும், புண்ணியன் கல்நெஞ்சன் என்றும் பெயர் பெற்றனர்.ஒருநாள் பாவனை அழைத்த புண்ணியன்,“சகோதரா! இறந்தவர்களுக்காக அழுவது என்பது பைத்தியக்காரத்தனமானது. ஏனெனில், மரணம் நிச்சயமானது. அது நாம் விரும்பாவிட்டாலும் வந்தே தீரும். நம் பெற்றோர் அவர்கள் காலம் முடிந்து இறந்தனர். நாம் நம் காலத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம். நாம் முனிவரின் பிள்ளைகள். நாமே வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணலாமா!” என்று அறிவுரை சொன்னான்.பாவனுக்கு வாழ்வின் நிஜம் புரிந்தது. |
|
|
|