|
ஒருமுறை அதிசயத்தக்க கண்ணாடி ஒன்று அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு கிடைத்தது. இந்த அபிமன்யு யார் தெரியுமா? வில் வீரன் அர்ஜூனனின் மகன். இந்தக் கண்ணாடியின் தன்மை என்னவென்றால், நம்மை மனதில் யார் அதிகமாக நினைக்கிறாரோ, அவரது உருவம் அதில் தெரியும். உத்தரை அதைப் பார்த்தாள். அப்போது, அவளது கணவன் அபிமன்யு அதில் தெரிந்தான். தன் கணவன் தன்னைஎப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதில் அவளுக்கு அதீத மகிழ்ச்சி.அதே போல, அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பார்த்தான். அதில் உத்தரையின் <உருவம் தெரிந்தது. ஆகா! கணவன், மனைவி என்றால், ஒருவர் மனதில் ஒருவர் குடியிருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இவர்கள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என மற்றவர்கள் மகிழ்ந்தனர்.அப்போது கிருஷ்ணர் வந்தார்.“மாமா! இந்த அதிசயக் கண்ணாடியைப் பாருங்கள். உங்களை மனதில் அதிகமாக நினைப்பது யாரென புரிந்து விடும்,” என்றான் அபிமன்யு.மாயக்கண்ணன் மந்திரக் கண்ணாடி முன் வந்து நின்றான். எல்லாருமே ருக்மிணி, பாமா, குந்தி, பாண்டவர்கள்...இப்படி யார் உருவமாவது தெரியுமென எதிர்பார்த்தார்கள். ஆனால், சகுனி அதில் தெரிந்தான்.“பரந்தாமா! இதென்ன அதிசயம்! உன் எதிரி இதில் தெரிகிறானே! எங்களை விட அவனா உங்களை அதிகம் நேசிக்கிறான். ஏதாவது மாயவித்தையைக் காட்டுகிறீர்களா?” என்றான் அபிமன்யு.கிருஷ்ணர் அவனிடம்“மருமகனே! நீங்களெல்லாம் துõங்கும் நேரத்திலாவது என்னை மறந்திருக்கிறீர்கள்! ஆனால், சகுனி துõக்கத்திலும் என்னைக் கொல்வது பற்றியே சிந்திக்கிறான். அதனால் அவன் உருவம் தெரிகிறது,” என்றார்.ஆஸ்திகர்களை விட நாத்திகர்களே கடவுளை அதிகமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். |
|
|
|