|
ஒரு வகுப்பில் மாணவர்கள், உடலில் மிகவும் முக்கிய உறுப்பு எது? என்று விவாதித்தார்கள். மூளை இல்லாவிட்டால் நமக்கு படிப்பு மண்டையில் ஏறாது. அதனால், மூளைதான் ரொம்ப முக்கிய உறுப்பு என்று ஒரு மாணவன் சொல்ல, வாய் இல்லாவிட்டால் நம்மால் பேச முடியாது, சாப்பிட முடியாது, நாக்கு இருப்பதால் தான் நாம் பேசுகிறோம் கைகள் இருப்பதால் தான் நாம்உழைக்கிறோம் என்று ஆளுக்கொன்றாக கருத்து சொன்னார்கள். அன்று இரவு மாணவன் மோகன் இதுபற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது தம்பி மணி வந்தான். சுண்டுவிரல் தான் மிகமேலானது. நாம் பிள்ளையாரை கும்பிடும்பொழுது பிள்ளையாருடைய கண் முதலில் நம் சுண்டு விரல் மேல் தானே படுகிறது? என்றான். மோகனின் தந்தை குறுக்கே புகுந்தார். நீங்கள் கூறுவதெல்லாம் சரிதான். உடலுக்கு எல்லா உறுப்புமே அத்தியாவசிய மானது தான். இதுவரை நீங்கள் நோக்கியதெல்லாம், நம் கண்ணுக்கு தெரியும் உறுப்புக்களைப் பற்றியே. நம் உடலுக்குள் இருப்பவை பற்றி நீங்கள் நினைக்கவே இல்லையே? எல்லாவற்றிற்கும் மேலான, நம்முடைய பகுத்தறிவைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது தானே, மனிதனையும், மற்ற உயிர்வாழ் பிராணிகளையும், செடி கொடிகளிலிருந்து வேறுபடுத்துகிறது? கடவுளின் படைப்பில் வேஸ்ட் என்று ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொருகடமை இருக்கிறது. ஆனால், எது நம் பார்வைக்குத் தெரியும் உறுப்புகளில் சிறந்தது எது என்பதற்கு இப்போது விளக்கம் தருகிறேன்.
நம்முடைய பதினெட்டுபுராணங்களிலும், வியாசமுனிவர், இரண்டே இரண்டு தார்மீக சிந்தனைகளை வலியுறுத்தி இருக்கிறார். மற்றவர்களுக்கு சேவை செய்தாலோ, அல்லது பரோபகாரம் செய்தாலோ நமக்கு புண்ணியம் கிடைக்கும். தொல்லை கொடுத்தாலோ, துன்பம் செய்தாலோ நமக்கு பாவம் சேரும் என்கிறார். உலகத்திலுள்ள எல்லா மதக்கொள்கைகளின்சாரமும் இதுதான். ஆக, நம் உடலில் எந்த உறுப்பு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல், உதவி செய்வதற்கோ, ஆறுதல் செய்வதற்கோ, அல்லது அனுதாபம், அடைக்கலம் அளிக்கவும் பயன்படுகிறதோ அதுவே சிறந்த உறுப்பு, என்றுசொல்லவும், மணி குறுக்கே புகுந்தான்.தாத்தா என்னை தோளில் துõக்கிக் கொண்டு தேர் திருவிழா முழுக்கசுற்றினாரே! அப்படியானால் தோள் தான் எல்லாவற்றையும் விட மதிப்புக்குரிய உறுப்பு, என்றான்.அது முற்றிலும் உண்மை. ஒருவருக்கு உதவுவதை தோள் கொடுங்கள் என்று சொல்வது இதனால் தான், என்று துவங்கிய மோகனின் தந்தை, நம்முடைய தோளை (உதவியை) மற்றவர்களுக்குக் கொடுத்தாலே, அவர்களுக்கு எவ்வளவு நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது பாருங்கள். அவர்களுடைய குழப்பங்கள், கவலைகள் எல்லாம் பாதிக்கு மேல் தீர்ந்து, அவர்களுக்குள் புத்தொளி தெரிவதை நாம்உணருகிறோம். எல்லா உறுப்புக் களுமே முக்கியம் வாய்ந்தவை என்றாலும், எல்லாவற்றிற்கும் மேலான உறுப்பு என்ன என்று பார்க்கப் போனால், அதுநம்முடைய தோள்கள் தான், என்று முடித்தார்.மறுநாள் மோகன் இதைசக மாணவர்களிடம் சொல்ல, எல்லாரும் ஆச்சரியப் பட்டார்கள். ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கவும் முடிவுசெய்தார்கள். |
|
|
|