Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இதயத்தில் அவன்!
 
பக்தி கதைகள்
இதயத்தில் அவன்!

கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள். துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து, இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான்.அவனும் அவ்வாறே செய்ய முற்பட்டான். கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்ற மகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அவள் அபலையாய் நின்று பதறினாள். வேறு யாரும் கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள்.கண்ணா! மதுசூதனா! திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷா, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா,  புருஷோத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள். அடுத்து, துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில், இதுபற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள்.அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்?என்றாள். கண்ணன் சிரித்தான்.திரவுபதி! எனது எல்லா நாமங்களையும் சொல்லி அழைத்த நீ, துவாரகா வாசா என்றும் சொன்னாய் அல்லவா! நான் துவாரகையில் இருந்து வர வேண்டாமா! அதனால் தான் தாமதம் ஆகி விட்டது. அதற்குப் பதிலாக  இருதய வாசா என்று அழைத்திருந்தால், உன்  இருதயத்திலிருந்து உடனே வெளிப்பட்டிருப்பேன், என்றார்.பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடிஅமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால், எந்தக் கஷ்டம் வந்தாலும், அவன் உடனே வருவான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar