|
கம்சனை வதம் செய்தபின் கிருஷ்ணனும், பலராமரும் சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் (பள்ளிப்படிப்பு) செய்தனர். சர்வ வித்தைகளும் பகவானிடமிருந்து தான் வருகிறது என்றாலும், உலகத்திற்கு குருபக்தியை காட்டவே, இப்படி ஒரு ஆசார்யனிடம் போய் படித்ததாக பாகவதம் சொல்கிறது.ஆனாலும்,பகவானுக்குஅவதார காரியங்கள் நிறையவே காத்துக் கொண்டிருப்பதால்,12 வருஷம்குருகுலத்தில் வாசம் செய்யாமல், தன் திவ்ய சக்தியையும் கொஞ்சம் வெளிப்படுத்தினார். ஒரு நாளைக்கு ஒரு சாஸ்திரம் வீதம்அறுபத்து நாலே நாளில் அத்தனை சாஸ்திரமும் கற்றுக் கொண்டு விட்டார். பலராமரும் அவதாரம் என்பதால் இப்படியே கற்றுக் கொண்டார். இதிலிருந்தே கிருஷ்ணரின் தெய்வீக சக்தியை குரு சாந்தீபனி தெரிந்து கொண்டு விட்டார். இருந்தாலும் என்ன தட்சிணை தரணும்? என்று பகவான் கேட்டபோது, ரொம்ப நாள் முந்தி சமுத்திரத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டதன்னுடைய பிள்ளையை,யமலோகத்தில் இருந்து மீட்டுக் கொண்டு தர வேண்டும், அது தான் தமக்கு வேண்டியதட்சிணை என்றார்.
பகவானும் அப்படியேநிறைவேற்றி வைக்கிறார்.குருகுலத்தில் இருந்த நாட்களில் குருவின் கட்டளைப்படி, காட்டுக்குப் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்து கூட கைங்கர்யம் பண்ணியிருக்கிறார். அந்த நாட்களில் தம்க்ளாஸ் மேட்டாக இருந்த குசேலருடன் தன் குருகுலவாசம் பற்றி நினைவுபடுத்துகிறார்.குசேலா! ஒருநாள் விறகு வெட்டுவதற்காக, நீங்களும் நானும் காட்டுக்குப் போனபோது இருட்டிவிட்டது. பேய் மழையும் பிடித்துக் கொண்டது. மேடு பள்ளம் தெரியாமல், திக்கு திசைபுரியாமல் கும்மிருட்டு வேறே. நானும் நீங்களும் பயந்துண்டு ராத்ரியெல்லாம் சுத்திசுத்தி வந்தோமே!ஞாபகமிருக்கோல்லியோ? என்று பகவானே குசேலரைக் கேட்கிறார். குருவின் வேலை வாங்கும் கண்டிப்பால் வந்தது இது!குழந்தைகளைக் காணோமே....ன்னுஅங்கலாச்சுண்டு குருநாதரும் நம்மைத் தேடிண்டு வந்து, சூரியோதய சமயத்தில் கண்டு பிடிச்சாரே! ஐயோ பாவம்! எனக்காக எத்தனை கஷ்டப்பட்டுட்டேள்? என்று நம்மிடம் எப்படி உருகிப் போயிட்டார்? அதற்கு பரிகாரமாக நமக்கு எப்படி மனசார அனுகிரஹம் பண்ணி, உங்களுடைய நல்ல நினைப்பெல்லாம் பூர்த்தியாகட்டும். நீங்க படிச்ச வேதம் எந்நாளும் பூர்ண சக்தியோடஉங்களை ரக்ஷிச்சுண்டு இருக்கட்டும் என்றெல்லாம் வரம் கொடுத்தாரே! என்றுகுசேலரிடம் தான்குருகுலத்தில் வாசம் செய்ததை ஞாபகப்படுத்துகிறார்.கண்ணனின் அந்தக் கால நினைவலைகளை மகாபெரியவர் நமக்கு ஞாபகப்படுத்தினார். அந்த நினைவுடன் கோகுலாஷ்டமியை கொண்டாடுவோம். |
|
|
|