|
ஒருசமயம், பகவான் நாராயணன்,பாற்கடலில் சயனம் கொண்டிருந்த போது, ஆழ்ந்த யோசனை ஏற்பட்டது. நாம் ராமாவதாரம் எடுத்து பூமிக்குச் சென்றோம். மனைவியைக் காணவில்லையே எனஅழுதோம், புலம்பினோம். மரங்களையும்,செடிகளையும் பார்த்து அரற்றினோம். குரங்குகள், கரடிகளிடம் கூட நட்புக் கொள்ள வேண்டி வந்தது. ராவணனுடன் கடும் யுத்தம் புரிந்து மனைவியைக் காப்பாற்றினோம். கடலையே கடந்து சென்றோம். இவ்வளவு செய்தும்,ராமசரிதம் என்றுஎழுதாமல், சீதைசரித்திரம் எனராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி தலைப்பிட்டு விட்டாரே! எதற்காக இருக்கும்! என்பது தான் அந்த யோசனை. பளிச்சென பகவானுக்கு அதற்குரிய விடையும் கிடைத்து விட்டது.நாம் சீதையைப் பிரிந்தோம். மனதளவில் கஷ்டப்பட்டோம். ஆனால், சீதா அப்படியா? அவள்ஒரு பெண். ஒரு அசுரனின் பிடியில் இருக்கிறாள். மாற்றான் இடத்தில் சிறை வைக்கப்பட்டு, தன் கற்பையும் பாதுகாத்துக் கொண்டு எந்தளவுக்குசிரமங்களைத் தாங்கியிருப்பாள். அந்த பெண்மையின் வலிமைக்கு வால்மீகி வணக்கம்தெரிவித்திருக்கிறார்என்பதைப் புரிந்து கொண்டார். அவ்வாறு, யோசித்ததன் விளைவு தான், அடுத்த கிருஷ்ணாவதாரத்தில்அவரும் தன் பிறப்பிடமாக சிறைச்சாலையை தேர்வு செய்தார்.ஆம்... வசுதேவரும்,தேவகியும் மதுராபுரிசிறையில் இருந்த போது, அவர்களது குழந்தையாய் பிறந்தவர் தான் கிருஷ்ணர். |
|
|
|