|
கிருஷ்ணரும், அவருடைய நண்பர்களும் பசுக்களை மேய விட்டு விளையாடிக் கொண்டுஇருந்தனர். விளையாட்டு ஆர்வத்தில், அவர்கள் பசுக்களை கவனிக்கவில்லை. பசுக்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்று விட்டன. அங்கு திடீரென தீ பரவத் தொடங்கியது. தீயில் சிக்கிக் கொண்ட பசுக்கள் தவித்தனசிறுவர்கள் செய்வதறியாது திகைத்தனர். கிருஷ்ணர்அவர்களிடம், கவலை வேண்டாம்! நான் இருக்க ஏன் பயப்படுகிறீர்கள்? என்றார். அவர்கள் எல்லாரும் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். வெப்பம் தாங்க முடியவில்லை. பீதியடைந்த சிறுவர்கள்,கிருஷ்ணா! எல்லா பசுக்களையும் தீ அழித்து விடும் போலிருக்கிறதே! நம் வீட்டில் என்ன பதில் சொல்வது? என்று அழுதார்கள். நண்பர்களே! அழாதீர்கள். எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். சொல்லும் வரை திறக்க வேண்டாம், என்று கட்டளையிட்டார். அதன்படி, சிறுவர்கள் கண்மூடி நிற்க,, கிருஷ்ணர் தன் யோகசக்தியால் காட்டுத்தீயை விழுங்கினார். பிறகு, எல்லாரையும் கண் விழித்துப் பார்க்கச் சொன்னார். என்ன அதிசயம்! தீ அங்கு எரிந்த சுவடே தெரியவில்லை. அத்துடன் எங்கும் குளிர்ச்சி நிலவியது. சந்தோஷக் களிப்பில், பசுக்கள் வெளிப்பட்டன. சிறுவர்கள் அதை ஓட்டிக்கொண்டு புறப்பட்டனர்.
|
|
|
|