|
ஒருநாள் அதிகாலை,கிருஷ்ணரின் வளர்ப்புத்தந்தை நந்தகோபர் யமுனை நதியில் நீராட புறப்பட்டார். அப்போது இருள் விலகவில்லை. தண்ணீருக்குரிய தேவதையான வருணனின் துõதன், காலமற்ற நேரத்தில் நீராட வந்த நந்த கோபரை வருணனிடம் இழுத்துச் சென்றான்.நீராடச் சென்ற தங்கள் தலைவரான நந்தகோபரைக் காணாததால், ஆயர்பாடியே கவலையில் ஆழ்ந்தது. யசோதை உள்பட எல்லாரும் செய்வதறியாமல் அழுதனர். கிருஷ்ணர் தன் யோகசக்தியால், நந்தகோபரைத் தேடினார். இது வருணனின் வேலை தான் என்பதை அறிந்தார். தந்தையை அழைத்து வர புறப்பட்டார். தன் மாளிகை நோக்கி வந்த கிருஷ்ணரைக் கண்ட வருணன், இருகைகளையும் கூப்பிவரவேற்றான். பகவானே! இன்று உங்களை தரிசிக்க என்ன புண்ணியம் செய்தேன்! தங்களின் திருவடியை வணங்கினால் பிறவிக் கடலையே கடந்து விடலாமே! யார் என அறியாமல் தங்களின் தந்தையை சிறை பிடித்த என் துõதனை மன்னியுங்கள்! எங்களுக்கு ஆசி கொடுங்கள் என்று வேண்டினான். வருணனின் வணக்கத்தை ஏற்றதோடு, துõதுவனின்செயலையும் மன்னித்தார் கிருஷ்ணர். நந்தகோபரோடு திரும்பிய கிருஷ்ணரைக் கண்ட ஆயர்பாடி மக்கள், கடவுளே தங்களோடு வாசம் செய்வதை அறிந்தனர். கிருஷ்ணா! நாங்கள் செய்த புண்ணியத்தால் உன்னோடு உறவாடும் பாக்கியம் பெற்றோம். நீ நிரந்தரமாக வாசம் புரியும் வைகுண்டத்தை இப்போது தரிசிக்க விரும்புகிறோம், என்றும் கேட்டனர். வைகுந்த வாசனாக தான் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தைக் கிருஷ்ணர்அவர்களுக்கு அப்போது காட்டியருளினார். உள்ளங்கையில் வைகுண்டம் என்பது போல, கிருஷ்ணரின் வரவால்ஆயர்பாடியே வைகுண்டமாக மாறியது.
|
|
|
|