|
கண்ணன் என்பவனின் பெற்றோர் மறைந்து விட்டதால், தாய் மாமன் வீட்டில் வளர்ந்தான்.தாய்மாமனின் மகள் ராதா. இருவரும் இளமை முதலே அன்பு கொண்டனர். அன்பு காதலானது. ஆனால், முறை தவறியதில்லை. தள்ளி நின்றே பேசுவார்கள் அவர்கள்.ஆனால், ஊர் வாய்க்கு அவல் கிடைத்தது. ஒரே வீட்டுக்குள் இருப்பவர்கள் முறை தவறாமலா இருப்பார்கள்? என்றுபேசியது.ராதா வருத்தப்பட்டாள். தன் ஊரிலுள்ள அம்மன் கோயிலில் சென்று,அம்மா! கற்பில் சிறந்த என்னை ஊர் துõற்றுகிறதே! நீ சொல்லக்கூடாதா?என்று கதறி அழுதாள். அப்போது அசரீரி ஊரே அலறும்படியாக ஒலித்தது.ராதா கற்பில் சிறந்தவள். அவள் பெய் என்றால் பெய்யும் மழை, என்றது. ஊரார் ஓடிவந்து அவளிடம் மன்னிப்பு கேட்டனர். உடனே அப்பெண்,அம்மா பராசக்தி! எப்படியோ இப்பிறப்பில் அவமானப்பட்டேன். இனியும் கன்னியாகவே காலம் தள்ளுவேன்.மறுபிறப்பு என்ற ஒன்று எனக்கு வேண்டும், அப்போது என் காதலரை மணக்க வேண்டும்,என்று வேண்டிவெளியேறினாள். இதைக் கேள்விப்பட்டு அவ்வூர் இளவரசன் வந்தான். அவளது அழகில் மயங்கிய அவன், அவளை இழுக்க முயன்று கையைத் துõக்கினான். துõக்கிய கை அப்படியே நின்று விட்டது. இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வர, நீதி தவறாத அந்த கோமகன், தன் மகன் என்றும் பாராமல் அவனது கையை வெட்டி வீழ்த்தினான். காதலிக்கலாம்...ஆனால், முறை தவறக்கூடாது. தன்னை விரும்பாத பெண்களைத் தொட விரும்புபவன் தண்டனை பெறுவான் என்பதற்கு இந்தக்கதை உதாரணம். பெண்கள் ஒழுக்கத்தைப்பின்பற்றினால் தான்,இனி இந்த தேசத்தில் மழை பெய்யும். |
|
|
|