|
ஒரு கிராமத்தின் வழியே நடந்துகொண்டிருந்த சந்நியாசி ஒருவர், அங்கே பாதையோரம் அமர்ந்திருந்த கிராமத்துத் தலைவனின் காலை தவறுதலாக மிதித்துவிட்டார். தனது தவற்றை உணர்ந்து, எந்தத் தயக்கமும் இன்றி, அந்தக் கிராமத்துத் தலைவனிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால், அவனோ சரியான முரடன். அவன் கடுங்கோபத்துடன் சன்னியாசியைச் சுடுசொற்களால் திட்டினான். கையிலிருந்த கழியால் அவரை அடிக்கவும் செய்தான். உடல்நலம் குன்றியிருந்த அந்தச் சன்னியாசி அடி தாங்காமல் மயங்கி விழுந்தார். கிராமத் தலைவனோ எதையும் சட்டை செய்யாமல், அங்கிருந்து போய்விட்டான். நல்லவேளையாக, சன்னியாசியின் சீடர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். குருவின் நிலை கண்டு வருந்தி, அவருக்கு முதலுதவி செய்தனர். சீடர்களில் ஒருவன், குருவே! இப்போது தங்களுக்கு சேவை செய்வது யாரென்று தெரிகிறதா? என்று கேட்டான். அதற்கு அவர், ஓ, தெரிகிறதே! சற்று முன் என்னை அடித்த அதே கைகள்தானே இப்போது எனக்குப் பணிவிடை செய்கின்றன என்றார். ஆமாம்! ஞானிகளுக்கு அடிக்கிற கையும், அணைக்கிற கையும் ஒன்றுதான். ஏனெனில், அவர்கள் மனிதர்களைப் பார்ப்பதில்லை. |
|
|
|