|
ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசிரமத்தில் ஆன்மிக விழாவுக்காக லட்டுகள் தயார் செய்து வைத்திருந்தார்கள். எறும்புகள் வந்து விட்டால் என்ன செய்வது என்று சீடர்கள் யோசித்தனர். பரமஹம்சரோ லட்டுக் குவியலைச் சுற்றிலும் சர்க்கரையை வட்டமாகத் தூவினார். அவரது சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்தில் லட்டை நோக்கி வந்த எறும்புகள் சர்க்கரையை மட்டும் தின்று விட்டுச் சென்றன. இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட சீடர்களை நோக்கி பரமஹம்சர், சில மனிதர்களும் இப்படித்தான், பெரிய லட்சியங்களை விட்டு விட்டு சின்னச் சின்ன விஷயங்களிலேயே சமாதானமாகி விடுகிறார்கள் என்றார். |
|
|
|