|
மனதில் உள்ள குழப்பம் தீர, எந்தக் கோயிலுக்குப் போகலாம் என தன் குருவைக் கேட்டார் ஒருவர். உன் குலதெய்வக் கோயிலுக்குப் போய் வா என்றார் குரு. அது நூறு மைல் தள்ளி இருக்கிறதே. பக்கத்தில் ஏதாவது கோயிலைச் சொல்லக்கூடாதா? என்றார் அவர். இல்லை, குலதெய்வக் கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும் என்றார் குரு. வீட்டுக்கு வந்த அவர், தம் மனைவி, மகன், மருமகள்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆளாளுக்கு ஒரு கோயிலைச் சொன்னார்கள். அன்பர் குழம்பி, மீண்டும் குருவிடமே வந்து கேட்டார். அவரவர் விருப்பங்கள் மாறும். ஆனால், குலதெய்வம் மாறாது. குழப்பம், கவலை ஏற்பட்டால் குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட வேண்டும். ஏனெனில், உங்கள் முன்னோர்கள் காலடியும், நோக்கமும் குவிந்த இடம் அது. குலதெய்வ ஆசியுடன், முன்னோரின் ஆசியும் உனக்குக் கிடைக்கும். அதனால் உனது குழப்பமும் தீரும் என்றார் குரு. |
|
|
|