|
குரு ஒருவர், தன் சீடர்களிடம் உலகின் மிக அழகிய பொருளைக் கொண்டு வர கட்டளையிட்டார். உற்சாகமுற்ற ஒரு சீடன் தான் அடிக்கடி கேள்விப்பட்ட பனிமலை உச்சிக்குச் சென்று தன் கையால் பனியைத் தொட்டு விளையாடினான். அதன் வெண்மை பரிசுத்தம் கண்டு இதுதான் உலகின் மிக அழகிய பொருள் என நினைத்து, கைநிறைய பனித்துõளை அள்ளிக் கொண்டு குருவிடம் ஓடி வந்தான். மற்ற சீடர்கள் கொண்டு வந்து இயற்கையின் அழகிய பொருட்களையும் குரு பரிசீலித்துக் கொண்டிருக்கும்போது உற்சாக சீடன் வந்து சேர்ந்தான். அனைவரும் அவன் கொண்டு வந்தது என்னவென்று ஆவலாய் பார்க்க, இதோ பாருங்கள் என் தனது கையை விரித்தான். அங்கு ஒன்றுமில்லை. உலகில் மிக அழகிய பொருளைக் கண்ணால் பார்க்க முடியாது. கையால் கொள்ள முடியாது. உணர மட்டுமே முடியும். சீடனின் பதிலை மிகவும் மகிழ்ந்த குரு அவனை ஆசிர்வதித்தார். |
|
|
|